()இந்தியாவில் அதிகம் பேர் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடம் என்பது மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
()நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு நலன் துறை, மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள (36) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த 2021-ம் ஆண்டில் (1,64,033)தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.()
()இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தற்கொலைகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் (22) ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் (18,925) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
()தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்() சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.